Wednesday, December 22, 2010

குழந்தைப் பாலியல் சீண்டல்கள்
தலைப்பைப் பார்த்ததுமே என் குழந்தைக்கா ச்சே! ச்சே! அப்படின்னு மனசு லேசா அறிச்சிருக்குமே.

அச்சச்சோ! உங்க நினைவை எங்கோ கொண்டு போயிடாதீங்க. அப்படியே வீட்டுக்குள்ளேயே கொண்டு வாங்க. ஆமாங்க இப்படி பட்ட துயரத்தை பெற்றோர்தான் வி(வே)லை கொடுத்து வீட்டிலேயே வாங்குறோம்.

" என் குழந்தையைப் பார்த்துகோங்க" ன்னு சொல்லிட்டு 'டாட்டா' கிளம்பும் பெற்றோரா! கவனம் தேவை.

பாலியல் சீண்டல்களால் அவஸ்தை படும் குழந்தைகள் வெகு இயல்பாக பெற்றோரிடம் நடந்து கொண்டாலும், ஆழமான மன இறுக்கத்திற்கு ஆளாகிறார்கள். தன்னால் எதிர்க்க முடியாததால் பற்களை கடித்துக்கொண்டும், கடும் கோபம் மற்றும் வெறுப்பு நிறைந்து குழந்தைகள் காணப்படுகிறார்கள்.

இதில் ஆகா! எனக்கு ஆண் பிள்ளை அப்படீன்னு ஓரத்துல என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு. ஆணென்ன! பெண்ணென்ன! யாரைத்தான் விட்டு வைக்கிறாங்க.


இரண்டு மில்லியன் குழந்தைகள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகுறாங்கன்னு உலகக் கணக்கெடுப்பு (WHO) சொல்லுது. இதுல சொல்லாமல் விட்டவர்களை கணக்கெடுத்து மாளாது.

இப்படி ஏன் நடந்துக்குறாங்கன்னு கோபம் வருதுல்ல? குழந்தைகளைச் சீண்டுபவர்களுக்கு, தனக்கும் சிறு பிள்ளையில் இது போன்ற சம்பவம் நடந்திருக்கலாம் என்பது மனொரீதியாக சொல்லப்படும் காரணம்.

இதையும் தாண்டி நம் குழந்தைகளிடம் ஏற்படும் மாற்றத்தை பற்றி பார்ப்போம்.

  • கல கல என ஓடித்திரிந்த குழந்தை வயதுக்கு மீறிய வெட்கத்தை காண்பிக்கிறதா?
  • நன்றாக படிக்கும் குழந்தை படிப்பில் நாட்டம் குறைந்து காணப்படுகிறதா?
  • காரணம் கூற முடியாமல் வெட்டுகள், காயங்கள் இருக்கிறதா?
  • அபரிமிதமான பசியால் மிகுதியான உணவை குழந்தை நாடுகிறதா?
(குழந்தைகளிடம் மனம் விட்டு பேசி காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்.)
  • வயதுக்கு மீறியவர்களுடன் நெருக்கமான நட்பு.
  • காரணமற்ற விலை உயர்ந்த அல்லது நிறைய விலை குறைந்த பரிசுப்பொருட்கள் ஒருவரிடம் இருந்தே கிடைக்கிறதா?
(வேண்டாம் என்று சொல்ல குழந்தைக்கு பழக்கி விடுங்கள்)


பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிகவும் குற்ற உணர்ச்சியில் தளைத்து விடுகிறார்கள். உறவினராக இருக்கும் பட்சத்தில் காண்பித்துக் கொடுக்க மனமின்றி மனதின் ஆழத்திலே புதைத்து விடுகிறார்கள். அவர்களிடம் நாம் உணர்ச்சி வசமாகாமல் நயமாகப் பேசுவது குழந்தைகளின் மனதிற்கு இதம் தரும்.

டீன் ஏஜ் குழந்தைகள் அதிகம் முறையிடுவது, "அம்மா ரொம்ப சந்தேகப்படுறாங்க" ன்னு. இதில் தாயின் அனுபவமும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதெல்லாம் சொல்லி மனச ரொம்ப கசக்கிட்டேனோ?

நடந்தவைகளை மறந்து குழந்தைகளின் மனம் சிட்டு குருவி போல் சுதந்திரமாய் பறக்கட்டுமே!
28 comments:

Chitra said...

விழிப்புணர்வு பதிவு. பலரை சென்றடைய வேண்டும்.

சொல்லச் சொல்ல said...

அதி வேகமான பதிலுக்கு நன்றி chitra

stella said...

akka,
Good to see your blog after a long time, that too about a serious issue.The article reminds me of a book named 'Bitter chocolate' by Pinki virani which i read long ago. It's about child abuse in india. After reading the book, i wondered how people could do such a thing like that & how parents are ignorant about what's happening to their children. As you said irrespective of the gender, they abuse infants too.I think if you get a chance you must read the book.

My wishes for you to continue your blog on more social issues.

சொல்லச் சொல்ல said...

rightly said Stella. Thank you for introducing the new book.

R.Gopi said...

இது போன்ற விழிப்புணர்வு பதிவு நிறைய பதிவர்கள் பதிந்துள்ளனர்...

இப்போது நீங்கள் பதிந்துள்ளீர்கள்...

இது போன்ற மேலும் பல உபயோகமான பதிவுகளை பதிந்திட வாழ்த்துக்கள்....

சொல்லச் சொல்ல said...

நன்றி கோபி, இது போன்ற விழிப்புணர்வுகளை மேலை நாடுகளில் பள்ளி குழந்தைகளுக்கு தருகிறார்கள். இதைக்குறித்த விஷயங்களை நம்பாமலேயே வாழ்க்கையை சுமையுடன் கடத்துகிறோம்.

! சிவகுமார் ! said...

>>> அச்சமுண்டு அச்சமுண்டு படம் இதற்கு ஒரு சிறப்பான உதாரணம்.

PUTHIYATHENRAL said...

its very good i like it. thank you.

உங்களுள் ஒருவன் said...

வெளிநாடுகளில் வேண்டுமென்றால் இது சகஜம் அக இருக்கலாம்..... அனால் இப்பொழுது இது இந்தியாவிலும் தலை தூக்கி இருப்பது சற்று வருத்த பட வேண்டிய ஒன்று தான்....... இந்த படிபின்னை எல்லாருக்கும் சென்று சேர வேண்டும்.........

கே.ஆர்.பி.செந்தில் said...

இன்றைய தேதிக்கு கவனமாகத்தான் இருக்கவேண்டும்..

tamilbirdszz said...

இன்றைய நாட்களுக்கு தேவையான ஒரு பதிவு விழிப்புணர்வு சிறப்பான ஒரு பதிவு

தமிழ் 007 said...

சமூக விழிப்புணர்வை உண்டாக்கக் கூடிய பதிவு.

ஒரு சின்ன சந்தேகம்!

நீங்கள் பதிவிடுவதில் ஏன் இந்த இடைவெளியை கடைபிடிக்கிறீர்கள்?

சொல்லச் சொல்ல said...

//அச்சமுண்டு அச்சமுண்டு படம் இதற்கு ஒரு சிறப்பான உதாரணம்.//
தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
இந்த படம் ஒரு extreme end . நாம் நமக்கு தெரியாதவர்களிடம் பழகுவதற்கு நிறைய வரைமுறைகள் வைத்திருக்கிறோம். தெரிந்தவர்களிடம் இது மிகக் குறைவு. இங்கு தான் தவறுகள் நாடக்கின்றன என்பதை சுட்டிக்காட்டவே இந்த பதிவு.

சொல்லச் சொல்ல said...

புதியதென்றல் said
//its very good i like it. thank you.//
புதிய தென்றல் சொல்லச் சொல்லவிலும் வீசிச் சென்றதற்கு நன்றி

சொல்லச் சொல்ல said...

உங்களுள் ஒருவன் said...//வெளிநாடுகளில் வேண்டுமென்றால் இது சகஜம் அக இருக்கலாம்..... அனால் இப்பொழுது இது இந்தியாவிலும் தலை தூக்கி இருப்பது சற்று வருத்த பட வேண்டிய ஒன்று தான்....... இந்த படிப்பினை எல்லாருக்கும் சென்று சேர வேண்டும்.........//

தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. வெளிநாடுகளில் (ஆஸ்திரேலியா, வளைகுடா )ரோட்டில் குழந்தைகள் சென்றால் கூட "புஜ்ஜிமா" என்று கூறி தொடக்கூட முடியாது . இந்தியாவில் இப்பிரச்சனை இன்று நேற்றல்ல துவங்கியது. இப்பொழுது சிறிதாக விஷயங்கள் வெளிவருகிறது என்பதே என் கருத்து.

சொல்லச் சொல்ல said...

Blogger tamilbirdszz said...

//இன்றைய நாட்களுக்கு தேவையான ஒரு பதிவு விழிப்புணர்வு சிறப்பான ஒரு பதிவு//.

நன்றி.

சொல்லச் சொல்ல said...

தமிழ் 007 said...

//சமூக விழிப்புணர்வை உண்டாக்கக் கூடிய பதிவு.
ஒரு சின்ன சந்தேகம்!
நீங்கள் பதிவிடுவதில் ஏன் இந்த இடைவெளியை கடைபிடிக்கிறீர்கள்?//
எரியற நெருப்புல எண்ணைய ஊத்திட்டீங்களே ராசா! நேரமில்லைன்னு சொல்லி ரொம்ப பிகு பண்ணிக்க விரும்பலை. என் தலையில் சரக்கு அம்புட்டுத்தேன்.

நான் பார்க்கும் பணியில் கணினியின் உபயோகம் அதிகம் இல்லை. வீட்டிற்கு வந்தும் நேரம் மிகக் குறைவாகவே கணினிமுன் ஒதுக்கமுடிகிறது. என் பணி மது, போதைப்பொருள், சூதாட்டம் போன்றவைகளில் அடிமையானவர்களுக்கு counselling. இவைகளில் வரும் அனுபவம் மற்றும் நம் யதார்த்த வாழ்வில் சந்திப்பதைக் குறித்தே எழுதுகிறேன்.

இந்த பின்னோட்டம் என் பதிவிற்கு நீங்கள் தரும் பேராதரவாக எடுத்துக்கொண்டு நன்றிகள் பல.

நிரூபன் said...

டீன் ஏஜ் குழந்தைகள் அதிகம் முறையிடுவது, "அம்மா ரொம்ப சந்தேகப்படுறாங்க" ன்னு. இதில் தாயின் அனுபவமும் முக்கிய பங்கு வகிக்கிறது.//

வணக்கம் சகோதரி,இவ் இடத்தில் தான் எமது சமூகம் தவறிழைக்கிறது. எமது சமூகத்தில் பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பால்யல் விடயங்களைப் பேசாத பெற்றோரின் செயற்பாடுகளும், பிள்ளைகளுடன் அந்தரங்க விடயங்களைப் பேசினால் அவர்கள் வழி தவறிவிடுவார்கள் எனும் சமூக கட்டமைப்புக்களும் தான் எமது தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் பாலியல் சீண்டல்களுக்கான பிரதான காரணங்களாகும்.

உங்களின் விழிப்புணர்வு நோக்கிய இப் பதிவு இன்னும் பல பேரைச் சென்றடைய வேண்டும் என்பதே என் அவா.

சொல்லச் சொல்ல said...

தங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன். நிறையப் பெற்றோர்கள் எதைக் குறித்து பேசத் தயாராக இருந்தாலும் எங்கு துவங்குவது என்ற தயக்கம். என் குழந்தைக்கு நடக்காது என்ற நம்பிக்கைதான்.

மைதீன் said...

சுருங்கச் சொன்னாலும், வீரியமாய் உள்ளது உங்கள் பதிவு. பாலியல் கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளின் மனநிலை நன்கு அறிந்தவன் நான்.அதன் பாதிப்புகளை மிக நெருக்கமாய் உணர்ந்தவன். அவர்களை மற்றவர்களிடம் இருந்து காப்பாற்ற தாயின் பங்கு மிக அவசியம்.உங்களின் சேவையை பற்றி பின்னூட்டத்தில் படித்தேன். உங்களின் பணிக்கு ஒரு சல்யுட்

sekar said...

Hi,

Thanks for wonderful and must read message. Though we knew or heard many issues already, somebody like you need to keep highlight the seriousness of this issue to others.

So parents will re think before leave their children alone with known person too.["Varum mun kakka"].

Keep write like this...

Sekar

தேனம்மை லெக்ஷ்மணன் said...

விழிப்புணர்வு பதிவு.. நன்றி

நெல்லி. மூர்த்தி said...

தற்போது தான் எதேச்சையாக தங்கள் வலைப்பூவினை பார்க்க நேர்ந்தது. என்னதான் முக்கியச் செய்தியாக இருந்தாலும் அதை சொல்லும் விதம் சுவாரசியமாக இருந்தால் தான் செய்தி மக்களிடையேச் சேரும். உங்களுடைய எழுத்து, மிகவும் எளிமையாக அனைவரையும் கவர்வதோடு சொல்ல வந்ததை ஆணித்தரமாக சொல்கின்றது. நேரமின்மை என்பது உழைக்கும் வர்க்கத்திற்க்கு (அது வீடாக இருக்கட்டும், நிறுவனமாக இருக்கட்டும்) தவிர்க்க முடியாத ஒன்று. இருப்பினும் இடைவெளியினைக் குறைத்து தொடர்ந்து பதிவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

குழந்தைகள் சம்பந்தமான பதிவுகள் தங்கள் வலைப்பூவினில் இடுவதோடு http://parentsclub08.blogspot.com/ இணைப்பினைத் தரலாம். பயனுள்ள இச்செய்தி மேலும் பலரைச்சென்றடைய வழிவகுக்கும்.

சொல்லச் சொல்ல said...

வாங்க மைதீன் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

சொல்லச் சொல்ல said...

Sekar,

Thank you for your comments! Interested in highlighting the issues which happens beyond our thoughts but have a limited control.

சொல்லச் சொல்ல said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! தேனம்மை!

சொல்லச் சொல்ல said...

நெல்லி மூர்த்தி, தங்களின் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு நன்றிகள். கண்டிப்பாக இடைவெளியை குறைக்க முயலுகிறேன்.

Ramani said...

நல்ல பயனுள்ள பதிவு
இடைவெளியை குறைப்பதாக
சொல்லியிருந்தீர்கள்
ஆயினும் அதிக இடைவெளி ஆகிவிட்டது
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்