Monday, February 1, 2010

வெளிநாட்டில் வேலையா! மோசடியை எப்படி அறிவது


முன்பெல்லாம் ஏமாத்துறவங்க நம்மைச் சுற்றி இருக்கும் நாலு பேருக்குள்ள தான் இருக்கும். இப்போவெல்லாம் எத்த்த்தன.

நண்பர் ஒருத்தரு எப்படியாவது வெளிநாட்டில் வேலை வாங்கிடணும்னு தவியா தவிச்சாரு. மாட்டுனடி! மவனேன்னு வலைக்குள்ள சிக்க வைக்கிறது தானே ஏஜெண்டுக வேல.

"மலேசியால தொலைபேசியில 3 சுற்றுத் தேர்வு. உங்க companyக்காகத்தான் நான் உசிரோட இருக்கென்ற மாதிரி நீ பேசு. மிச்சத நான் பார்த்துக்கறேன்", இது ஏஜெண்டு.

இதை வீட்டில் வந்து சொன்னவுடன், " எவன்ட்டையும் இத பத்தி உளரீராத. மலேசியால இருக்க உன் friend சோமுட்ட மட்டும் இதப்பத்தி கேட்டுக்கோ. இது அம்மாவின் கண்டிப்பு.

தொலைபேசி தேர்வுல நல்லா வந்தாலும் நானே அந்த கம்பெனி GMக்கு சொன்னேம்பாருங்க அதுனால வேலை உங்களுக்கே தர்றதா ஒத்துக்கிட்டாரு. இந்த வேலைக்கு அவ்வளவு போட்டி போங்க. இப்போ நீங்க செய்ய வேண்டியது எல்லாம், விசாக்காக 700 டாலர்கள் கட்டணும். மத்ததெல்லாம் உங்க வீடு தேடி வரும்.

நண்பனும் கனவு வெள்ளத்தில் மூழ்கியவாறே அனைத்து பணத்தையும் கட்டி முடித்தார்.

வேலைக்கான agreement கையில் வந்தது. ஒரு ஆர்வக்கோளாறால் வலைதலத்தினுள் சென்று இந்த வேலைக்கான பொறுப்புகளின் தேடல்களைத் துவங்க, வந்து நின்றது www.fraudwatchers.com

அதுல , நண்பனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதே வேலை அதே code no. வேலைக்கு எடுக்கப்பட்டிருக்கும் ஆள் மட்டும் வேற. எது இன்னாடா புதுக் கதையா இருக்கேன்னு இன்னும் சிறிது உள்ளே போனப்போ தான் தெரிஞ்சுது இதே வேலையாத்தான் செல பேர் திரியிராய்ங்கன்னு .

போலி விசாக்களை தயார்செய்து நம்மைப் பின்னால் மலேசியா போலீசில் அடிவாங்க வைக்கிறது எந்த கூட்டம்ன்னு தெரியாது. ஆனா இது fraud தான்னு சொல்ல ஒரு வலைதளமே இருப்பது கொஞ்சம் ஆசுவாசம்.

இவை மட்டுமல்ல அந்த வலைதளத்தில் ஏமாறாமல் இருக்க சில டிப்ஸ்களும் உண்டு. ஈமெயில் மோசடி, ஏற்றுமதி- இறக்குமதி எனும் பெயரில் ஏமாற்றும் போலி கம்பனிகள் என்பனவற்றையும் தெரிந்துகொள்ளலாம்.

வலைதளத்தின் பெயரைச் சொன்னவுடனேயே அங்கு தாவி சென்றிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

இருந்தாலும்...

வாழ்க்கையில் யாராவது யோசனை கூறினால் "பாசக்கார பயலுகப்பா" என ஒரேடியாகக் அவர்கள் யோசனையிலேயே கவழ்விந்து விடாமல், கொஞ்சம் உஷார் ஆகிடுவோம்ல!4 comments:

R.Gopi said...

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்...

ஆசையே அனைத்து துன்பங்களுக்கும் ஆணிவேர்... ஆயினும், அனைத்துக்கும் ஆசைப்படுன்னு “ஸ்வாமி ஜக்கானந்தா” சொல்கிறார்...

இங்கு நாம் அறிந்து கொள்ள் வேண்டியது “பேராசை” பற்றி...

இன்னும் கொஞ்சம் கூட இது பற்றி விரிவாக எழுதுங்களேன்... பயனுள்ள விஷயங்கள் சிறிது பெரிதாயினும் படித்து தெளிவு பெறவே அனைவரும் விரும்புவர்...

நல்ல கட்டுரைக்கு வாழ்த்துக்கள்...

Harini said...

Neenda nattkalukku peragu ungalai santhippathil 'Mazhichi'.

Mealum sollunga...

KALYANARAMAN RAGHAVAN said...

எல்லோருக்கும்விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் தேவையான பதிவு.

ரேகா ராகவன்.

சி. கருணாகரசு said...

பயனுள்ள ... பொறுப்பான தகவல்.

நன்றி.

(இந்த சொல் சரிபார்ப்பதை எடுத்துடுங்க...)