Saturday, August 22, 2009

மனம் பேசியதே


நமக்குத் தெரிந்த ஒருவருக்கு, ஒரு கொடிய வியாதி வந்ததென்றால் நாம் உடனே சொல்வது, அவருக்காப்பா! அவரு தண்ணியடிக்கமாட்டாரு, தம் பழக்கம் கூட கிடையாதேப்பா என உடனே நாம் ஒரு "உச்" கொட்டுவோம்.

சில நோய்கள் வருவதற்கு நாம் மனதில் எடுக்கும் முடிவுகள் மற்றும் மனதில் எழும் எண்ணங்களின் பங்கை "Heal Your Body" என்னும் நூலில் பிரபல மனோதத்துவ நிபுணர் Louise Hay எழுதியுள்ளார். இவர் நல்லவர், வல்லவர் எனக் கூறி அவார்டு கொடுக்க (த்த ) நிறைய பேர் உள்ளதால் நாம் Louise Hay கூறிய விஷயங்களுக்கு நேரே செல்வோம்.

நமது மனம் பேசிய சொற்கள் படிதான் நமது உடல் நமக்கு ஈடு கொடுத்து வருகிறது என்பதுதான் இவரின் (பலரின்) முக்கிய தத்துவம். இவர் இன்னும் சிறுது ஆராய்ச்சியுடன் இன்னின்ன எண்ணத்திற்கு இன்னின்ன நோய்கள் பிறக்கக் காரணமாய் இருக்கிறது என புட்டு, புட்டு வைத்திருக்கிறார்.

அவற்றில் சில,

 • கண் திரை, கண் பார்வை மங்குதல்: நான் அவன் மூஞ்சியிலேயே முழிக்கமாட்டேன் என்பன போன்ற சபதங்களால் ஏற்படும் விளைவுகள்
 • காது கேளாமை :
  வீட்டுக்காரர் () வீட்டம்மா கத்திக்கொண்டே இருப்பார் , என்று நினைத்து எதுவும் காதில் விழுகாதது போல் இருத்தல்.
 • முழங்கால்வலி: அடுத்தவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு நெஞ்சுபொறுக்காதவர்கள், அடுத்தவர்களின் முன்னேற்றப்பாதையில் தடையிடுபவர்கள்.
 • ஒற்றைத் தலைவலி: தன்னைத் தானே விமர்சித்தல் ( Self Criticism), பயம்.
 • ஆஸ்துமா: வெளியில் சொல்லமுடியாமல் மனதிலேயே அழுவது.
 • மூலம்: கடந்த காலம் பற்றிய கோபம், இறப்பைக்குறித்த பயம்.
 • மலச்சிக்கல் : கடந்தகால நிகழ்வுகள், நினைவுகள் அவற்றை விட்டு வெளியே சிந்திக்க மறுப்பது .
 • மேல் முதுகு வலி : தன்னிடம் அன்பு செலுத்த யாரும் இல்லை என நினைப்பவர்கள்.
 • நடு முதுகு வலி : குற்ற உணர்ச்சி .
 • கீழ் முதுகு வலி : பண பலம் இல்லை என நினைத்துக்கொண்டே இருத்தல் .
 • மாதவிடாய் பிரச்சனை : பெண்மைத் தன்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பது .
 • மார்பகப் புற்றுநோய் : அதிகத் தாய்மை பாராட்டுதல்
 • தைராய்டு : அவமதிப்பு, அவமானம், தான் செய்ய நினைக்கும் காரியத்தை செய்யமுடியவில்லை என்ற வருத்தம்.
 • புற்றுநோய் : ஆழ்ந்த காய மனதுடன் ஜீவித்தல் , வெளியில் சொல்லமுடியாத இரகசியத்தை மனதில் பூட்டி வைத்திருத்தல் , பகைமையைச் சுமந்து கொண்டிருத்தல்.
 • மார்பு வலி : தனிமையாகிவிட்டது போல் நினைத்தல், பயம், தான் வாழ்வில் போதுமானவற்றை செய்யவில்லை , இனியும் செய்ய இயலாது என்ற முடிவு.
இருங்க! இருங்க! அடுத்தவகளுக்கு என்ன நடந்திருக்கும் என நினைத்துப்பார்க்க ஓடிராதீங்க !

நாம் செல்லும் பாதையில் இவைகளை எல்லாம் சரிபடுத்திக்கொண்டால் அனாவசியமான நோய்த் தொல்லையிலிருந்து நாம் தப்பிப் பிழைக்கலாம்.

மனித உறவுகளை முன்னிறுத்தி கூறியிருப்பதால் இதை உங்களிடம் பகிர வேண்டும் என்ற ஆவலுடன் ...

"தீதும் நன்றும் பிறர் தர வாரா "... சரிதானே ...

7 comments:

பிரியமுடன்...வசந்த் said...

சரியான விளக்கங்கள்

எண்ணம் போல் வாழ்க்கை என்பது இதுதானோ.....

வேர்ட் வெரிஃபிகேசன் எடுத்துடுங்களேன் ப்ளீஸ்.........

நிலாமதி said...

சில விடயங்கள் உள்ளத்தை தொட்டு சென்றன. உன்னயே நீ அறிவாய் என்பது போல இருக்கு. நன்றியும் பாராட்டுக்களும் நட்புடன் நிலாமதி

சொல்லச் சொல்ல said...

வசந்த், நிலாமதி அவர்களுக்கு எனது நன்றிகள் பல.

கலையரசன் said...

புதுசா இருக்கே இந்த தகவல்கள்!

Anonymous said...

Orru vasagam sonnallum Thrivasam erruku ungal 'Solla solla'.

Meedum 'Keatka Keatka...thonuthu ungal 'Solla Solla'

Eval
Harini

sekar said...

It is nice to read your blogs.

Keep it up.

Warm Regards,

Sekar

R.Gopi said...

சொல்ல சொல்ல....

எப்போதும் ஏதாவது ஒரு நல்ல விஷயத்துடன் வரும் நல்ல பதிவுகள்...

இதோ, இந்த பதிவை போலவே...

தீதும் நன்றும் பிறர் தர வாரா... எல்லாம், நம் எண்ணப்படியே...