Tuesday, July 28, 2009

கேட்பாரற்று கிடப்பவை


அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்வதற்கு, இன்னும் சில நிதி திரட்டும் முறைகளைப் பார்ப்போம்.

வேறென்ன இருக்கவே இருக்கு நமது சமையல் கலை. "எத்தன புத்தகத்தை புரட்டி, எவ்வளவு டிப்ஸ்களை பார்த்திருப்போம்!" ஆனால் செய்யத்தான் முடியலை என நொந்துகொள்பவர்கள் பலர்.

"நான் தேங்காய் பர்பி நன்றாகச் செய்வேன். ஆனால் என் பிள்ளைகளுக்கு இனிப்பு விருப்பமில்லை. சின்னது, நான் கெஞ்சியதற்க்காக ஒரு கடி கடிக்கும். எனக்கும், என் கணவருக்கும், இனிப்பு வகைகள் சதை போடுமே என நினைத்து அதை சாப்பிடுவதில்லை . அதனால் செய்வதையே விட்டுவிட்டேன்" எனப் புலம்பும் பலரைப் பார்த்திருப்போம்.

உங்களின் திறமைகளைக் காண்பிக்க அருமையான வழி.

அவ்வூரில் உள்ள சங்கம், அல்லது பள்ளி அலுவலகப் பணியாளர்கள் ஒன்றிணைந்து அவரவர்கள் வீட்டிலிருந்து உணவுப் பதார்த்தங்களை கொண்டுவரச் செய்து பள்ளி விழாவன்று விற்பனை செய்யலாம். அதிலிருந்து வரும் பணத்தில் பள்ளிச் சிறார்க்குத் தேவையான , சுத்தமான கழிவறை, குடிநீர், சோதனைக் கூடம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த இவைபோன்ற நிதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நிதி திரட்டுவதற்காகவே பள்ளியில் விழா எடுப்பதில் ஒரு குற்றமும் இருப்பதாகத் தோன்ற வில்லை. அவ்வாறாக எடுக்கும் விழாவிற்கு, அருகே உள்ள நகரத்திலிருந்து மக்களையும் வரவேற்கலாம்.

இப்படி பணத்தை புரட்டி ஒரு சிறு வசதியைக் கொண்டுவர ரொம்பகாலம் பிடிக்குமே என நினைக்கத்தோன்றும். என்றுமே கேட்பாரற்று கிடந்தவை ஒரு சில ஆண்டிலாவது சீர்படுத்த நல்ல வாய்ப்புதானே.

பணத்தை பள்ளியிலேயே எவரேனும் அடித்துவிட்டால் என்னசெய்ய? என்று தானே அடுத்ததாக நினைக்கத் தோன்றுகிறது.
எங்கிருந்து பணம் வருகிறது, யார் திட்டமிடுகிறார்கள், என்பன போன்ற விஷயத்தை அறியாததனால் எங்கு செலவாகிறது என்ற விஷயமும் தெரியாமல் போய்விடுகிறது.

இவை போன்ற உதவியில் கலந்துகொண்ட பல கைகள் இருக்கும். சும்மா விடுமா என்ன? அதற்கு பயந்தே வேலைகள் நன்றாக நடக்கும் பாருங்களேன்.

3 comments:

கலையரசன் said...

இன்னம் நிறைய சொல்லுங்கள் தோழி!!

R.Gopi said...

//"எத்தன புத்தகத்தை புரட்டி, எவ்வளவு டிப்ஸ்களை பார்த்திருப்போம்!" ஆனால் செய்யத்தான் முடியலை//

மிக சரியாக சொன்னீர்கள் தோழி...

//சங்கம், அல்லது பள்ளி அலுவலகப் பணியாளர்கள் ஒன்றிணைந்து அவரவர்கள் வீட்டிலிருந்து உணவுப் பதார்த்தங்களை கொண்டுவரச் செய்து பள்ளி விழாவன்று விற்பனை செய்யலாம். அதிலிருந்து வரும் பணத்தில் பள்ளிச் சிறார்க்குத் தேவையான , சுத்தமான கழிவறை, குடிநீர், சோதனைக் கூடம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த இவைபோன்ற நிதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.//

சூப்பர்.... நானும் இது போன்று நினைப்பதுண்டு... அடுத்தவரை எல்லாவற்றிற்கும் நம்பாமல், இது போல் செய்யலாம்... குட்...

//எங்கிருந்து பணம் வருகிறது, யார் திட்டமிடுகிறார்கள், என்பன போன்ற விஷயத்தை அறியாததனால் எங்கு செலவாகிறது என்ற விஷயமும் தெரியாமல் போய்விடுகிறது//

வாவ்... நல்ல சிந்தனையை தூண்டிய கேள்வி....

//இவை போன்ற உதவியில் கலந்துகொண்ட பல கைகள் இருக்கும். சும்மா விடுமா என்ன? அதற்கு பயந்தே வேலைகள் நன்றாக நடக்கும் பாருங்களேன்.//

ம்ம்....சரிதான்... மிக நல்ல பதிவை அளித்தமைக்கு வாழ்த்துக்கள்.

சொல்லச் சொல்ல said...

சர் சர்ருன்னு வர்ற உங்கள் பின்னூட்டங்கள், நல்ல ஆராய்ச்சியுடன் வருவதைக் கண்டு மெய் சிலிர்க்கிறது. நன்றிகள் பல