Thursday, July 2, 2009

கோக்குன்னா விடு ஜூட்


இந்த நாட்களில் கோக் மற்றும் பெப்சிக்கு ஏங்காதவர்கள் ஒரு வயது முதலே இல்லை எனலாம். வாய்பேசாவிட்டாலும் ஜாடையிலேயே புரியவைத்து விடுகிறார்கள் சுட்டிகள். இதனைக்குறித்து தீமைகள் எவ்வளவு வெளியிட்டாலும் விடுவதில்லை நாம்.

முதலாவதாகத் தெரிவது பல் பிரச்சனை. பல் மருத்துவமனையில் பாலர் க்யு மிக நீளம். இப்போதுள்ள காலகட்டத்தில் நமது அங்கங்களை 'டிங்கரிங்' பார்த்து சரிசெய்துக்கொள்ளலாம் என கங்கணம் கட்டிக்கொண்டு கோக் பெப்சி கம்பெனிகளுக்கு லாபம் குறைந்து விடாமல் பார்த்துக்கொள்பவர்களில் நாமும் கில்லாடி.
சமீபத்தில் ஒரு பிறந்தநாள் விழாவில் பத்தே மாதம் நிறைந்த குழந்தை, ஜாடையில் அடம்பிடித்து கோக்கை காண்பித்து அழ, தாயும் " எப்படி கேட்கிறான் பாருங்களேன்", என்று கூறி மிக சந்தோஷமாக ஊற்றிக் கொடுத்தததைப் பார்த்து பகீர் என்றது மனம். எங்கு சென்றாலும் இவை கிடைப்பதால் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது என்று தம்மைத் தாமே தேற்றிக் கொள்ளும் பெற்றோர்கள் பல.

ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை குழந்தைகள் வைத்திருபோர்க்கும், இனி பெற்றோர் ஆகவிருக்கும் அனைவருக்கும் சிறு யோசனை. மற்றவர்கள் "bit late".

கோக் வேண்டும் எனக் கேட்கத் துவங்கும் முதல் நாளன்று பாட்டிலை உடைத்தவுடன் ஒரு மடக்கு கொடுக்கவும். சுறுசுறுவென நாக்கில் இழுக்க இனி அதைக்கண்டால் அவர்களே ஓடி விடுவார்கள். இது கொடுமைக்கார ஷாக் மருத்துவம் என்றாலும் விவரம் தெரியும் காலம் வரை வொர்க் அவுட் ஆகும் யோசனை இது.

இதை எனது மகளுக்கு ஒன்றரை வயதில் செய்தது. வயது பத்தாகிறது. இப்பொழுது அதனைக் குறித்து அவள் வாசித்து அறிந்து கோக், பெப்சி, மிராண்டா, மற்றும் சோடா பானத்தைக் கண்டால் விடு ஜூட்.
ரொம்ப உணர்ச்சிவசப்படாதீர்கள் உங்கள் மகள் "பெரியவளானால் எப்படி" என நீங்கள் சொல்வது என்காதில் விழுகிறது.
அதான் சொன்னேனே "விவரம் தெரியும்" காலம் என்று,
Atleast பிஞ்சு உறுப்புகளில் பெற்றவர்களே நஞ்சை ஊற்றவில்லை என்ற நிம்மதியாவது கிட்டும்.

9 comments:

Unknown said...

Hello Anni,
Interesting article!
Many Greetings,
Prakash

கீதா இளங்கோவன் said...

Hi, Your article is good. Photo is cute. Good begining. All the best. Geetha

Unknown said...

Hello Kanthi,

Good start!!
"Puyal Pola Pongi Ezhu pulla!

All the Best.
Harini

Anonymous said...

Hi Kanthi,

Good topic to start with.
அருமையான உபாயம் சொல்லியிருக்கிறீர்கள்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
தினகரன்

Kannan said...

Congrats!

Nice article it is!

Good message too!!

Keep it UP........P!!!

- Rangoli

Anonymous said...

உங்களின் சமுக அக்கறைக்கு முதலில் எனது பாரட்டுக்கள்.

சசி

nagai said...

coke with menthos .........please read the effects ..it kills ..blasts...

R.Gopi said...

//இப்போதுள்ள காலகட்டத்தில் நமது அங்கங்களை 'டிங்கரிங்' பார்த்து சரிசெய்துக்கொள்ளலாம் என கங்கணம் கட்டிக்கொண்டு கோக் பெப்சி கம்பெனிகளுக்கு லாபம் குறைந்து விடாமல் பார்த்துக்கொள்பவர்களில் நாமும் கில்லாடி. //

ஹா...ஹா...ஹா... நிதர்சனமான உண்மை நகைச்சுவையாய் இங்கே..

//முதல் நாளன்று பாட்டிலை உடைத்தவுடன் ஒரு மடக்கு கொடுக்கவும். சுறுசுறுவென நாக்கில் இழுக்க இனி அதைக்கண்டால் அவர்களே ஓடி விடுவார்கள். இது கொடுமைக்கார ஷாக் மருத்துவம் என்றாலும் விவரம் தெரியும் காலம் வரை வொர்க் அவுட் ஆகும் யோசனை //

ஓகே ஓகே...டபுள் ஓகே.. அதாவது, தெனாலிராமன் சூடான பாலை பூனையிடம் வைத்தது போல்... பலே யோசனை..

//Atleast பிஞ்சு உறுப்புகளில் பெற்றவர்களே நஞ்சை ஊற்றவில்லை என்ற நிம்மதியாவது கிட்டும்.//

அதே அதே.... இனி அல்ல எப்போதும் நான் “கோக்” வகையறாக்களை கண்டால், விடு ஜூட் தான்...

அணில் கோக் குடிக்கும் அழகே அழகு...

நல்ல பதிவு, பகிர்வு... வாழ்த்துக்கள்.

சொல்லச் சொல்ல said...

உங்களின் வார்த்தைகள் மிகுந்த உற்ச்சாகமளிகின்றன. வலைத்தளத்தில் வந்தமைக்கு மிக்க நன்றி.